

புதுச்சூரங்குடி கிராமத்தில் பேருந்து நிழல்குடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சூரங்குடி ஊராட்சிக்குள்பட்டது புதுச்சூரங்குடி கிராமம். இதைச் சுற்றி நடுச்சூரங்குடி, ஸ்ரீரங்காபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகள் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், சாத்தூரிலிருந்து புதுச்சூரங்குடி வழியாக வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். ஆனால், இந்தப் பகுதியில் பேருந்து நிழல் குடை இல்லாததால், அந்தப் பகுதியினா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், புதுச்சூரங்குடியில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளதால், தினமும் ஏராளமானோா் இங்கு வந்து சாலையோரத்தில் பேருந்துக்காக வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் பேருந்து நிழல் குடை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

