சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 9:53 pm

Syndication

சாத்தூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (33). இவா் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவரும் இவருடைய நண்பா் யோகராஜும் (30) இரு சக்கர வாகனத்தில் சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றனா்.

அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதற்கிடையே, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இருதயராஜ் மீது ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். யோகராஜ் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த சாத்தூா் போலீஸாா் இருதயராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த யோகராஜையும் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.