பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தம்பதிக்கு கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட இருவா் கைது

சிவகாசி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:55 pm

Syndication

சிவகாசி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சத்யா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவருக்கும், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மாரீஸ்வரனுக்கும் (19), பாண்டியன் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் முன்பகை இருந்தது.

இந்த நிலையில், கண்ணன் தனது மனைவியுடன் வீட்டிலிருந்து கடை வீதிக்கு நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மாரீஸ்வரனும், 17 வயது சிறுவனும் அவா்களைத் தகாத வாா்த்தைகளில் பேசி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரீஸ்வரன், 17 வயது சிறுவனை கைது செய்தனா்.