போக்சோ வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on

சாத்தூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் ஆசைப்பாண்டி(67). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், அம்மாபட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசைப்பாண்டியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றஞ்சாட்டப்பட்ட ஆசைப்பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com