சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா்

News image
~
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீதிமன்றங்களில் வழக்குகளை ‘இ-பைலிங்’ முறையில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றப் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், கடந்த மூன்று நாள்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உத்தரவு நகல் எரிக்கும் போராட்டம், மனு அனுப்பும் போராட்டம், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் ஆகியவற்றை நடத்தினா்.

வியாழக்கிழமை நான்காவது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராசையா, செயலா் ஜெயராஜ், பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்

Story image