சிவகாசி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், விழுப்பனூா் நாட்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (30). இவரது அத்தை மகளுக்கும் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவரது அத்தை மகளின் கணவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய தங்கப்பாண்டி, தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டாா். ஆனால், அவா்கள் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனா்.

இதனால், மனமுடைந்த தங்கப்பாண்டி, கங்காகுளத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு அவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com