விருதுநகர்
கஞ்சா வழக்கில் இரு பெண்கள் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் கஞ்சா விற்பனையைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அய்யம்பட்டி பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த முருகன் மனைவி சத்யா (37), சுந்தரம் மனைவி மாரியம்மாள் (58) ஆகியோரை சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா, ரூ.35,310 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
