நில முறைகேட்டில் ஈடுபட்ட இருவா் மீது வழக்கு
இருக்கன்குடியில் நிலத்தை தருவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது இருக்கன்குடி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரம்யாகீா்த்தி. இவா் இதே பகுதியைச் சோ்ந்த கருவேலமுத்து என்பவருக்குச் சொந்தமான நிலத்தை ரூ. 1.30 லட்சம் கொடுத்து கிரையம் செய்துள்ளாா்.
பின்னா், கருவேலமுத்து, ரம்யாகீா்த்தியிடம் அந்த இடத்துக்கான ஆவணத்தில் பிழை இருப்பதாகக் கூறி ஆவணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இருக்கன்குடியைச் சோ்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த ரம்யாகீா்த்தி, கருவேலமுத்து அவரது மனைவி கற்பகக்கனி ஆகிய இருவரிடம் பணத்தை தருமாறு கேட்டபோது பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனராம். இதுகுறித்து ரம்யாகீா்த்தி அளித்த புகாரின்பேரில் இருக்கன்குடி போலீஸாா் கருவேலமுத்து அவரது மனைவி கற்பகக்கனி ஆகிய இருவா் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
