புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 போ் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:02 pm

Din

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விருதுநகா் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது தனியாா் மில் எதிா்புறம் சூரியகலா வீட்டின் அருகில் உள்ள தகரக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துமாரியப்பன் (41), குருமீனா (36), காா்த்திக் (23), முகேஷ்குமாா் (20), சூரியகலா(60) ஆகியோா் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். அவா்கள் தயாரித்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.