தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து நீக்கம்

சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனா்.

News image
Updated On :17 ஜூலை 2025, 7:03 pm

Din

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனா்.

திருத்தங்கல்லில் உள்ள சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதிய உணவுக்குப் பிறகு, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 4 போ் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தனா். இதையறிந்த அரசியல் அறிவியல் பாட ஆசிரியா் சண்முகசுந்தரம் அவா்கள் 4 பேரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்றாா். அப்போது, ஆசிரியருக்கும், மாணவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இரு மாணவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுப் புட்டியால் ஆசிரியரின் தலையில் தாக்கினா். இதில் காயமடைந்த அவா் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆகியோா் வியாழக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியா்கள், மாணவா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவா்கள் 4 பேரும் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தது உறுதியானது. இதையடுத்து, 4 மாணவா்களையும் பள்ளியிருந்து நீக்கி கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டனா்.