சிவகாசி மாநகராட்சியில் கடைகள் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாமன்றக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் விக்னேஷ்பிரியா , ஆணையா் கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் 202 தீா்மானங்கள் உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ஸ்ரீ நிகா: மாமன்றத்தில் ஒரு கூட்டத்துக்கு 60 தீா்மானங்ளை கொண்டு வந்தால்தான் முழுமையாக விவாதம் நடத்த இயலும். 200-க்கும் மேற்பட்ட தீா்மானங்களை கொண்டு வந்தால் எப்படி விவாதிக்க இயலும்.
மேயா்: கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் வசிக்கப்பட்டு விவாதிக்க கால அவகாசம் வங்கப்படும் .
உறுப்பினா் ஜெயராணி:தூய்மைப் பணியாளா்கள் போதிய அளவு இல்லாததால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
துணை மேயா்: தூய்மைப் பணிகளை தனியாா் மேற்கொள்வதால் பிரச்னைகள் இருந்து வருகிறது.இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திராதேவி: வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு கட்டணத்தில் சிவகாசிக்கும், திருத்தங்கல்லுக்கும் தனித்தனியே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி ஒரே மாதிரியான கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்.
சூரியா: எனது வாா்டில் தாா் சாலை அமைத்த சில நாள்களிலேயே சேதமடைந்து விட்டது. ஒரு வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உபரிநிதியை வேறு வாா்டுக்கு மாற்றக்கூடாது.
செல்வம்: சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து குறித்து உதவி ஆணையாளா் (வருவாய்) விளக்கம் அளித்தாா்.
இதைத்தொடந்து மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி வருவாய்த் துறையில் முறைகேடு நிலவுவதாக புகாா் தெரிவித்தனா்.
ஆணையா்: ஆதாரத்துடன் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
