புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேசுவரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, நந்திக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து, நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதே போல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேசுவரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல, சாத்தூா் பத்திரகாளியம்மன் கோயில், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள சத்திரம் அண்ணபூரணியம்மன் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.