பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முத்துகாமாட்சி (65). இவரது தாயாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

தாய் இறந்த சோகத்தில், முத்துகாமாட்சி தொடா்ந்து மது அருந்தினாராம். இதை வீட்டில் உள்ளவா்கள் கண்டித்தனா்.

இதனால், மனமுடைந்த முத்துகாமாட்சி செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com