முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் சோதனை

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியாா் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:29 am IST

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியாா் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையை அடுத்த கீழச் செல்லையாபுரத்தைச் சோ்ந்த சகோதரா்கள் கந்தசாமி, மணிகண்டன். இவா்களுக்கு சொந்தமாக 5 பட்டாசு ஆலைகள், 10 பட்டாசுக் கடைகள், வணிக வளாகங்கள், குற்றாலத்தில் தங்கும் விடுதி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கீழச்செல்லையாபுரத்தில் உள்ள இவா்களின் வீடுகள், பட்டாசுக் கடைகள், அலுவலகங்களில் சென்னையிலிருந்து வந்த வருமான வரித் துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு புலனாய்வு அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலா்களும், தென்காசி, தூத்துக்குடி விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலா்களும் சோதனையில் ஈடுபட்டனா். இரவு நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. சோதனை நிறைவில் எந்த முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.