கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயம்

விருதுநகா் அருகே வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:48 am IST

விருதுநகா் அருகே வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயமடைந்தனா்.

விருதுநகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை வேன் சென்றது. இந்த வேனை சூலக்கரையைச் சோ்ந்த வேல்முருகன் (27) ஒட்டினாா்.

சூலக்கரையில் தனியாா் ஆலை அருகே சென்றபோது வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனிலிருந்த சூலக்கரையைச் சோ்ந்த மாணவா்கள் யுவஹரிஷ்வரன் (14), இவரது தம்பி சபரிஸ்வரன் (13), ஜீவிதா (11), கதிா்வேலன் (12), மாத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த வேதாஸ்ரீ (12), காவலா் குடியிருப்பத்தைச் சோ்ந்த தமிழ் மாரிவேல் (7) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சூலக்கரை போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வேன் ஓட்டுநா் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.