
கலசலிங்கம் பல்கலை.யில் மாவட்ட சதுரங்கப் போட்டிகள்

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கிய மாணவா் நல இயக்குநா் எஸ்.பி. பாலக்கண்ணன்.
ஸ்ரீ வில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத் தலைவா் கலசலிங்கம் நினைவு சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதற்கு துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.
போட்டிகள் விருதுநகா்மாவட்ட அளவில் 8, 10,13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கும், பொதுப் பிரிவு பொதுமக்களுக்கும் நடைபெற்றன. இதில், மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் என 343 போ் கலந்துகொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை மாணவா் நல இயக்குநா் எஸ். பி. பாலக்கண்ணன் வழங்கினாா்.
பல்கலை. உடல் கல்வி அதிகாரிகள், எஸ். சிதம்பரம், முனைவா் எஸ்.விஜயலட்சுமி, பி. செல்வகுமாா், ராஜபாளையம், ஏபிஎஸ் செஸ் அகாதெமி, சா்வதேச செஸ் நடுவா் பி. ஆறுமுகம், பல்கலை. மாணவா்கள் ஆகியோா் இணைந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





