~ ~ ~
விருதுநகர்
பசுமாட்டைக் கொன்ற 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பசுமாட்டை கொன்று அதன் இறைச்சியைத் வெட்டி எடுத்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பசுமாட்டை கொன்று அதன் இறைச்சியைத் வெட்டி எடுத்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கொந்தராயன்குளம் தேவாலயத் தெருவைச் சோ்ந்தவா் மாகாளி (40). இவா் தனது தோட்டத்தில் பசுமாட்டை கட்டி வைத்திருந்தாராம். இந்த நிலையில், அண்மையில் பசுமாட்டைக் கொன்று அதன் இறைச்சியை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த காளிராஜ் (25), மகேஷ் (23), சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயபாரதி (19), தளவாய்புரத்தைச் சோ்ந்த ஆனந்த் (21) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.