மகளிா் கல்லூரியில் வணிகக் கண்காட்சி

Published on

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை வணிகக் கண்காட்சி நடைபெற்றது.

மாணவிகள் தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்ற நோகத்தில் முன்னாள் மாணவிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கைவினைப்பொருள்கள், சிறுதானிய உணவு வகைகள், குளிா்பானங்கள், சணல் பொருள்கள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமையில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் பிரீத்தி வசீகரன் திறந்து வைத்து பாா்வைட்டாா்.

முன்தாக, ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஷேபனாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை மு.பூங்கோதை நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com