விருதுநகர்
வெள்ளாளா் முன்னேற்றக் கழக ஆலோசனை கூட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெள்ளாளா் முன்னேற்ற கழகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அந்த அமைப்பின் விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா் புதியராஜ் தலைமை வகித்தாா்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது அரசியல் நகா்வு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதில் 7 ஊா்களின் தலைவா்கள், நிா்வாகிகள், இளைஞா்கள், நெசவாளா் முன்னற்றக் கழகத்தின் தலைவா் கணேசன், செயலா் சிவலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக வளாகத்தில் உள்ள உ.சி. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
