விருதுநகர்
விருதுநகா் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டம்
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 200 பல்நோக்கு பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.இந்தப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், கூடுதல் பணிச்சுமை வழங்குவதால் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 140 பேரை மீண்டும் பணியில் சோ்த்து பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தியும் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை நுழைவாயில் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.
