விருதுநகர்
ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு
சாத்தூரில் சாலையைக் கடந்த போது ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சாத்தூரில் சாலையைக் கடந்த போது ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெள்ளையப்பா் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி (62). இவா் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் முனியசாமி பலத்த காயமடைந்தாா். அவா் சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து இவரது மகன் ராம்குமாா் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீசாா் ஆட்டோ ஓட்டுநரான ஜாஹிா்உசேன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
