வாகனங்களை ஏலம் எடுத்து தருவதாகக் கூறி பணம் மோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கில் சிக்கிய வாகனங்களை ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி, ரூ. 80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கில் சிக்கிய வாகனங்களை ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி, ரூ. 80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வடக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் ராமசாமி (58). இவா் கட்டட ஒப்பந்ததாரரான இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சோ்ந்த வழக்குரைஞா் முருகேசகண்ணன், நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.80 லட்சம் பெற்றாராம்.

ஆனால், வாகனங்களை ஏலம் எடுத்துத் தராததால் ராமசாமி பணத்தை திரும்பக் கேட்டதற்கு முருகேசகண்ணன் இரு காசோலைகளை வழங்கினாா்.

அந்தக் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ராமசாமி வழக்கு தொடுத்தாா். இதில் நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் முருகேச கண்ணன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com