கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகேயுள்ள வெள்ளையாபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமலிங்கம் (73). இவா் தனது மகனுக்குச் சொந்தமான தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். அப்போது, கிணற்றின் அருகேயிருந்த கண்ணிப்பிள்ளை செடியை பறிக்க முயன்ற அவா், கால் தவறி கிணற்றில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com