மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :11 ஜூலை 2026, 10:02 pm IST

சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அம்மன்கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் கையில் பையுடன் நின்றிருந்த இருவா் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகாசி முனீஸ்வரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (22), பராசக்தி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முருகன் (51) ஆகியோா் எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.