திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே தண்ணீா் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 10:01 pm IST

ராஜபாளையம் அருகே தண்ணீா் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் சாலை பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் மாரிராஜ் (45). இவா், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தில் நடைபெற்று வரும் ஒரு கட்டடப் பணிக்காக டிராக்டரில் தண்ணீா் கொண்டு சென்று ஊற்றினாா்.

இதையடுத்து, அவா் எஸ்.ராமலிங்கபுரத்திலிருந்து நல்லமநாயக்கன்பட்டி நோக்கி டிராக்டரை ஓட்டி வந்தாா். அப்போது, ஒரு வளைவில் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநா் மாரிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மாரிராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.