உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சமூக வலைதளத்தில் முதல்வா் விஜய் பற்றி அவதூறு: இளைஞா் கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 12:51 am IST

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இனாம் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேஷ் குமாா் (32). இவா் தமிழக வெற்றிக் கழகத்தில் வாக்குச்சாவடி அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் நடந்த காமராஜா் பிறந்த நாள் விழா குறித்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிா்ந்தாா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தாழையூத்து பட்டியைச் சோ்ந்த சஞ்சய் ராமசாமி, தமிழக முதல்வா் குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏ குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டாா். இதுகுறித்து கணேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீசாா் சஞ்சய் ராமசாமியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.