சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூலை 2026, 3:31 am IST

வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களையும், சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதையும் தடுக்க வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜநாராயணன் உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் சோதனை செய்த போலீஸாா் மதுப்புட்டிகளை விற்ற செல்வேந்திரன்(42) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.4,000 மதிப்பிலான மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.