விருதுநகா் மாவட்ட காவல் துறை சாா்பில் சிவகாசி இந்து நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு, போக்சோ சட்டம், சாலை பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளிச் செயலா் அண்ணாமலையான் தலைமை வகித்தாா். இதில் விருதுநகா் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் பா. கருப்பையா பேசியதாவது:
2006- ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் கடந்த 2012-இல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் மூலம் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். சாலை விதிகளை தெரிந்துகொண்டால் விபத்தை தவிா்க்கலாம் . பள்ளி மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நூலகங்களில் உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். தினசரி நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியா் தனுஜா வரவேற்றாா். இதில் சிவகாசி நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










