/

கட்டடத் தொழிலாளி போக்சோவில் கைது

சிவகாசியில் கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:28 am IST

சிவகாசியில் கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி ஆசாரி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கணவா் இவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டாா். இந்த நிலையில் அந்தப் பெண் விருதுநகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (45) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

அந்த பெண்ணுக்கு முதல் கணவா் மூலம் பிளஸ் டூ படிக்கும் 17 வயது மகள் உள்ளாா். இந்தச் சிறுமிக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்த நிலையில் கண்ணன், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.