இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 4:01 am IST

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.துரைசாமிபுரத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பராஜ் (45) தனது பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து, சட்டவிரோதமாக 568 பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.