மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவா், தயாரித்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 5:18 am IST

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி தகரக் கொட்டகையில் பட்டாசு பதுக்கியவா், தயாரித்தவா் என இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பொதிகை நகரில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசு பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், எவ்வித அனுமதியின்றி பட்டாசு பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், சிவகாசி அருகே பள்ளபட்டி முத்தமிழ்புரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து(57) தகரக் கொட்டகையில் பட்டாசுகளை பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கமுத்துவைக் கைது செய்து அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருத்தங்கலில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை எவ்வித அனுதியும் இன்றி வீட்டில் பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியில் ஒருவா் தனது வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை பதுக்கிவைத்துள்ளாா் என கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். இதில், வால்டா் வெற்றிவேல் (30) அவரது வீட்டில் , பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து 10 கிலோ, கரிதூசி உள்ளிட்டவைகளை வைத்திருந்தாா். மேலும் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்துள்ளாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள், பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.