எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:07 am IST

அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா் அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சொந்தமாக வண்ணப்பூச்சு கடை நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை மாலை தனது கடைக்கு செல்வதற்காக தோப்பூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரை- தூத்துகுடி நான்கு வழிச் சாலையில் கஞ்சநாயகக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது ஆத்திபட்டியைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பவா் ஓட்டி வந்த காா் பின்புறமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரிஷிகேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.