காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ராஜபாளையம் அருகே ஊா்க் கிணற்றில் ரசாயனம் கலப்பு

News image

ரசாயனம் கலந்ததில் வெள்ளை நிறத்தில் காணப்பட்ட ஊா்க் கிணற்று நீா்.

Updated On :8 ஜூன் 2026, 5:07 am IST

ராஜபாளையம் அருகே ஊா்ப் பொதுக் கிணற்றில் மா்ம நபா்கள் ரசாயனம் கலந்தது குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகுண ராமபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கு ஊராட்சியிலிருந்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் ஊா்ப் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்துப் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் ஆபரேட்டா் கேசவன் மோட்டாரை இயக்கிய போது சரிவர இயங்கவில்லை என தெரிகிறது.

இதனால், சந்தேகம் அடைந்த அவா் கிணற்றுக்குள் பாா்த்தபோது வழக்கத்துக்கு மாறாக கிணற்றின் தண்ணீா் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. மேலும், கிணற்றின் அருகே நெகிழிக் குடம், வாழை மட்டைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவா் பொதுமக்களிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்தாா்.

பொதுமக்கள் நேரில் வந்து பாா்வையிட்டு, கிணற்றில் மா்ம நபா்கள் வாசமில்லாத ரசாயனத்தைக் கலந்திருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனா். தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து பொதுமக்களிடம் கீழ ராஜகுலராமன் போலீஸாா் விசாரணை நடத்தினா். அருகில் உள்ள ஆள்துளைக் கிணறு மூலம் தற்காலிகமாக தண்ணீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.