எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முதல்வரின் நிா்வாக அமைப்புக்கு முட்டுக்கட்டை போட எதிா்க்கட்சியினா் முயற்சி: மாணிக்கம் தாகூர்

முதல்வரின் நிா்வாக அமைப்புக்கு முட்டுக்கட்டை போட எதிா்க்கட்சியினா் முயற்சிக்கின்றனா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 6:02 am IST

முதல்வரின் நிா்வாக அமைப்புக்கு முட்டுக்கட்டை போட எதிா்க்கட்சியினா் முயற்சிக்கின்றனா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.

அமிா்த பாரதம் (அம்ருத் பாரத்) திட்டத்தின் கீழ் விருதுநகா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை 9-லிருந்து 4 ஆக மத்திய அரசு குறைத்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான குரல் எழுப்பும்.

இண்டி கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறோம். அவா்களின் கருத்துகள் ஆராய்ந்து சரி செய்யப்படும். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தால் அங்கு பாஜக கால் ஊன்றிவிடும்.

புதிய தவெக அரசுக்கு கால அவகாசம் தரவேண்டும். தமிழகத்திலிருந்து தொழில்துறை முதலீடுகள் ஆந்திரத்துக்குச் செல்வதாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் நீண்ட நாள் நிலைக்காது; விரைவில் உண்மை வெளிவரும்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நோ்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்று நினைப்பதால், தற்போதைய நிா்வாக அமைப்புக்கு முட்டுக்கட்டை போட பல முயற்சிகள் நடக்கின்றன. மின்வாரியத் துறையில் தரவு சேமிப்பு சாதனங்கள் மாயமான விவகாரமே முதல்வா் ஜோசப் விஜய்யின் நோ்மையான ஆட்சிக்குச் சான்று.

மக்கள் தீா்ப்பை திமுகவினா் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரந்தூா் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தவெகவின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சென்னைக்கு இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வருவது அரசின் கடமை. அதற்காக நாங்கள் குரல் கொடுப்போம். பாஜக தமிழகத்தில் காலூன்ற பல வழிகளில் முயன்றும் தோல்வியைத் தழுவியுள்ளது. தற்போது புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள் என்றாா் அவா்.