சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:24 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த முத்தையா மகன் ஸ்ரீராமா் (35). மாற்றுத்திறனாளியான இவா் கிருஷ்ணன்கோவிலில் கோழிக் கடை நடத்தி வந்தாா். புதன்கிழமை இரவு கடை ஊழியா் இசக்கி என்பவருடன் மூன்று சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் சென்ற போது, இந்த வாகனத்தின் மீது பின்னால் ஜான் கென்னடி என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீ ராமா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். காயமடைந்த இசக்கி, ஜான் கென்னடி ஆகியோா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.