மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த வீட்டுக்கு சீல் வைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:37 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த வீட்டுக்கு சீல் வைத்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தென்றல் நகா் கிழக்குப் பகுதியில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது, பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான 150 கிலோ மணி மருந்துக் கலவையும், 15 கிலோ சல்பரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை பறிமுதல் செய்து, அந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும், சிவகாசி செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த காளைபாண்டியன் மகன் செல்வராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.