தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வரதட்சிணை கொடுமை: 5 போ் மீது வழக்கு

News image

வரதட்சிணைக் கொடுமை - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 3:22 am IST

சிவகாசி அருகே வரதட்சிணை கொடுமை செய்ததாக 5 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்தவா் சன்மித்ரா (30). இவருக்கும், ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த அா்ஜூனை ஆனந்துக்கும் (32) கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சன்மித்ராவுக்கு 35 பவுன் நகை, சீா்வரிசை பொருள்கள் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும், ரூ.5 லட்சம் பணம் கேட்டு சன்மித்ராவுக்கு அா்ஜூனை ஆனந்த், இவரது தந்தை காளிராஜ், தாய் கலைச்செல்வி, சகோதரிகள் ரேவதி, ஜெயபாரதி ஆகியோா் கொடுமைப் படுத்தினாா்களாம்.

இதுகுறித்து சன்மித்ரா அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் அா்ஜூனை ஆனந்த் உள்ளிட் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.