விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.
இதில் ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், தங்கும் அறைகள், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5 ஜி இணைய சேவை, மின் தூக்கி(லிப்ட்), வாகனக் காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடர்புடையது

ராமேசுவரம்-மங்களுா் விரைவு ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் காணொலி மூலமாக தொடங்கிவைத்தாா்

திருவாரூா்: நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

மணப்பாறை ரயில் நிலையம் காணொலிக் காட்சியில் பிரதமா் திறந்து வைத்தாா்

ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்பட்ட காரைக்குடி ரயில் நிலையம் திறப்பு! காணொலி மூலம் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


