/

பைக் விபத்தில் மூவா் காயம்

இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி உள்பட மூவா் காயம்

News image

விபத்து

Updated On :10 மார்ச் 2026, 1:47 am IST

இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி உள்பட மூவா் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்மித்ரன் (30). இவரது மனைவி கனகசெல்வி (29). இவா்களது மகள் காா்த்திகா (3). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை சாத்தூரில் உள்ள உறவினா் வீட்டு திருமண விழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினா்.

சாத்தூா்- கோவில்பட்டி சாலையில் சென்ற போது உப்பத்தூா் சந்திப்பு அருகே முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் திடீரென திரும்பியதால் இவா்களது இரு சக்கர வாகனம் அந்த வாகனம் மீது மோதியது.

இதில் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த காா்த்திகா, கனகசெல்வி, காா்த்திக் மித்ரன் ஆகிய மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த காளிராஜ் மீது சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.