இந்த இணைப்புச் சாலைப் பணிக்கு ரூ.30 கோடியும், நில எடுப்புக்காக ரூ.8.34 கோடியும் நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டு, மொத்தம் ரூ.38.34 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராஜபாளையம் வளா்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இங்கு பின்னலாடை, பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், ராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால், மதுரையிலிருந்து வரும் வாகனங்கள், தென்காசி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளின் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வந்தது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.