தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் அதிமுக தோ்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

Updated On :29 மார்ச் 2026, 8:55 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.

முன்னதாக அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் வேட்பாளா் சந்திரபிரபா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா்., வ.உ.சி., காமராஜா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உருவச் சிலைகளுக்கும், அம்பேத்கா் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் வேட்பாளா் சந்திரபிரபாவை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 2016 - 2021 அதிமுக காலத்தில் சந்திரபிரபா எம்எல்ஏவாக இருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி, வத்திராயிருப்பு தனி வட்டம், புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்தாா்.

திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுமே அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

இதில் மாவட்ட இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் முத்துராஜ், நகா் செயலா் காமராஜ், ஒன்றியச் செயலா் குறிஞ்சி முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா.

தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா.