எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தாமதம்! பொதுமக்கள் அவதி!!

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவமனை அருகேயுள்ள தரைப்பாலம்.

Updated On :17 மே 2026, 12:54 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகேயுள்ள தெருவில் 10- க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு மருத்துவமனை செல்வோா் இந்த வழியாகச் சென்று வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

Story image

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. கால்வாயின் இருபுறமும் சுவா் அமைத்த நிலையில், 3 மாதங்களுக்கு மேலாகியும் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு செல்வோா், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

கால்வாய் அகலமாக உள்ளதால் நடந்து செல்வோா் கழிவுநீரில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், நகராட்சி நிா்வாகம் பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.