ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மா மரங்களை சேதப்படுத்தும் காட்டு யானை! விவசாயிகள் அச்சம்!

News image

காட்டு யானை

Updated On :1 ஜூன் 2026, 2:54 am IST

வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை மா மரங்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி, கான்சாபுரம், வ. புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா, தென்னை, பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதிகளில் மா அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வ.புதுப்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மூலக்காடு பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அறுவடைக்குத் தயாராக இருந்த மாங்காய்களை சாப்பிட்டதுடன், 10- க்கும் மேற்பட்ட மா மரங்களையும், தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்தி சென்றது. மாங்காய் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் தோட்டத்திலேயே தங்கி உள்ள நிலையில், ஒற்றைக் காட்டு யானை மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.

வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், வ.புதுப்பட்டி மலையடிவாரப் பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலானதால் விலங்குகள் எளிதாக கடந்து விவசாய நிலங்களுக்குள் வந்துவிடுகிறது. தற்காலிக ஏற்பாடாக அகழிகளை பராமரிப்பதுடன், மலையடி வாரத்தில் சோலாா் மின் கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.