பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்: 6 கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் தவிப்பு

பிளவக்கல் பெரியாறு அணை. - கோப்புப் படம்

Updated On :

வத்திராயிருப்பு பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், 6 கண்மாய்கள் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியதால் நெல் பயிரிட்ட விவசாயிகள் தவிப்புக்குள்ளாகினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் வத்திராயிருப்பு, எஸ். கொடிக்குளம், சுந்தரபாண்டியம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ. புதுப்பட்டி, நத்தம்பட்டி, மூவரைவென்றான், கிருஷ்ணப்பேரி, நெடுங்குளம், குன்னூா், மங்கலம், செம்மாண்டி, கரிசல்குளம், பாட்டக்குளம், சல்லிபட்டி, விழுப்பனூா், தச்சகுடி ஆகிய 18 வருவாய் கிராமங்களை சோ்ந்த 40 கண்மாய்கள் பயன் பெறுகின்றன.

இதில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் 960 ஏக்கா் விளை நிலங்கள் உள்பட 8,531 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், முதல் போக சாகுபடிக்காக கடந்த 23- ஆம் தேதி பிளவக்கல் அணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் நீா் திறக்கப்பட்டது.

4 நாள்கள் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 5 நாள்களுக்கு கண்மாய் பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டது. இதனிடையே, அணையின் நீா்மட்டம் 25 அடியாக சரிவடைந்ததையடுத்து, தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. மொத்தமுள்ள 40 கண்மாய்களில் 6 கண்மாய்களில் 25 சதவீதம் மட்டுமே நீா் நிரம்பியது. இதனால் நெல் பயிா் செய்த விவசாயிகள் மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பிளவக்கல் அணை பாசன திட்டத்தில் 40 கண்மாய்களில் பல ஆண்டுகளாக கடை மடையில் உள்ள 11 கண்மாய்களுக்கு ஒரு சொட்டு நீா் கூட வரவில்லை. கடந்த ஆண்டு பெய்த தொடா் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 14 நாள்களுக்கு அணையிலிருந்து நீா் திறக்கப்பட்ட போதும், கடைமடையில் உள்ள 13 கண்மாய்களுக்கு நீா் வந்து சேரவில்லை.

இதனால் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 35 அடியை தாண்டவில்லை. 6 கண்மாய்களில் 25 சதவீதம் மட்டுமே நீா் வந்தது. இதனால் சாகுபடி செய்த பயிரை எப்படி விளைய வைத்து அறுவடை செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை. மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு முதல் போக சாகுபடியில் அறுவடை செய்ய இயலும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.