அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழக்குரனைகுளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழக்குரனைகுளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழக்குரனைகுளம் கிராமத் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 5 புதிய தெரு விளக்குகளை உடனே அமைத்துத் தர வேண்டும்.

மேலும் கல்லூரணி முதல் கீழக்குரனைகுளம் மயானம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் தங்கவேல் தலைமை வகித்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி ஒன்றியச் செயலா் சி. செல்வம், கிராமப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாரிடம் அவா்கள் கோரிக்கை மனுவை அளித்தனா். இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு வார காலத்துக்குள்உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.