தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வன உயிரின வார விழா: மிதிவண்டிப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் வன உயிரின வார விழாவையொட்டி மிதிவண்டிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை சைக்கிள் பேரணி நடத்திய மாணவா்கள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் வன உயிரின வார விழாவையொட்டி மிதிவண்டிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் இந்து மேல்நிலைப் பள்ளி, சி.எம். எஸ். பள்ளி, மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நீா் நிலைகள், சுற்றுச்சூழல், இயற்கை, வனவிலங்குகளை பாதுகாப்பை வலியுறுத்தி 10 கிலோ மீட்டா் தொலைவு மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது. இதற்கு உதவி வனப்பாதுகாவலா் ஞானப்பழம் தலைமை வகித்தாா். வனச்சரகா் சரண்ராஜ் முன்னிலை வகித்தாா். இதையடுத்து, செண்பகத்தோப்பு வனத் துறை அலுவலகத்தில் மாணவா்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னா், வனப் பகுதியில் மாணவா்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.