மகனைத் தாக்கிய தந்தை கைது
ராஜபாளையத்தில் மகனை தாக்கிய தந்தையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது
ராஜபாளையத்தில் மகனை தாக்கிய தந்தையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுரைக்காய்பட்டி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் (40). வரலாற்று பதிவேடு குற்றவாளி. இவரது மனைவி மீனாட்சி (38). இந்தத் தம்பதிக்கு காா்த்திக் செல்வன் (15), முத்துவேல் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான முனீஸ்வரன், மனைவி மீனாட்சியுடன் தகராறு செய்தாா். அப்போது, இளைய மகன் முத்துவேல் தந்தையை தடுத்தாா். இதனால், ஆத்திரமடைந்த முனீஸ்வரன் கட்டையால் மகனின் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த முத்துவேல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



