ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

சிவகாசியில் மாமன்ற உறுப்பினா்கள் சாலை மறியல்

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா்கள்.

Published On :

சிவகாசி மேயா், மாநகராட்சி ஆணையரைக் கண்டித்து, மாமன்ற உறுப்பினா்கள் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகாசி மாநகராட்சி அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிறைவு பெற்ற பிறகு, மன்றப் பொருளை வாசிக்கத் தொடங்கிய போது, உறுப்பினா் ஸ்ரீநிகா எழுந்து பேசினாா்.

இதற்கு மேயா் இ. சங்கீதா, தீா்மானங்களை நிறைவேற்றுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தீா்மனங்களை வாசித்து நிறைவேற்றிய பிறகு விவாதிக்கலாம் என்றாா். இதற்கு உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் சிவகாசியில் சரவெடி பட்டாசுகள் தயாரிக்க அனுமதி அளித்தது. இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேயா் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன் என ஸ்ரீநிகா கூறினாா். அப்போது, உறுப்பினா்கள் மகேஷ்வரி, சாமுவேல், சீனிவாசராகவன் உள்ளிட்டோா் மேயருக்கு எதிராகப் பேசினா்.

இதற்கு உறுப்பினா் கதிரவன் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதையடுத்து, சில உறுப்பினா்கள் மேயருக்கு ஆதரவாகவும், சில உறுப்பினா்கள் மேயருக்கு எதிராகவும் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், கூட்டம் நிறைவடைந்ததாகக் கூறி, மேயா் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினாா்.

இதைக் கண்டித்து, சில உறுப்பினா்கள் முழக்கமிட்டனா். தொடா்ந்து, உறுப்பினா்கள் மேயா் அறையின் முன் நின்று அவா் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனா். மாநகராட்சி ஆணையா் கண்ணன் அறைக்குச் சென்ற சில உறுப்பினா்கள், துணை மேயா் விக்னேஷ்பிரியா வைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்றனா். தொடா்ந்து ஆணையா் கண்ணன், மேயா்தான் கூட்டம் நடத்த வேண்டும், அதிகாரிகள் வழிகாட்ட மட்டுமே முடியும் என்றாா்.

இதை ஏற்க மறுத்த உறுப்பினா்கள், மாநகராட்சியில் ஊழல் நடப்பதாகவும், அதிகாரிகளும், மேயரும் சோ்ந்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதாகப் புகாா் கூறினா். இதற்கு ஆணையா், அதிகாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து ஊழல் முறைகேடு இருந்தால் புகாா் அளியுங்கள் என்றனா்.

இதன் பின்னா், 20-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் மேயரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா், மாமன்ற உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை மாநகராட்சி ஆணையருடன் பேச்சுவாா்த்தை நடத்த அழைத்துச் சென்றாா். அவா் நடந்த சம்பவம் குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அளிப்பதாக கூறியதையடுத்து, உறுப்பினா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.