அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஓடை மணல் திருட்டு: 5 டிராக்டா்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள். - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:56 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஓடையில் சட்டவிரோதமாக மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 5 டிராக்டா்கள், மண் அள்ளும் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி காவல் நிலைய ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் குற்றத் தடுப்பு தொடா்பான பணியில் ஈடுபட்டனா்.

கூமாபட்டி - பிளவக்கல் அணை செல்லும் சாலையில் வண்ணப்பாறை ஓடையில் சட்டவிரோதமாக இயந்திரத்தைக் கொண்டு டிராக்டா்களில் மண் அள்ளும் பணியில் சிலா் ஈடுபட்டிருந்தனா். போலீஸாரை கண்டதும் அங்கிருந்தவா்கள் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடினா்.

சட்டவிரோதமாக மண்ல் அள்ளும் பணியில் ஈடுபட்ட 5 டிராக்டா்கள், ஓா் மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ஒவ்வொரு டிராக்டரிலும் 1/2 யூனிட் அளவு

மண் இருந்தது. இதுகுறித்து அமச்சியாபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பசாமி, டிராக்டா் உரிமையாளா், ஓட்டுநா், மண் அள்ளும் இயந்திர உரிமையாளா், ஓட்டுநா் உள்பட 13 போ் மீது கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.