
ரெட்டியாா்சத்திரம் அருகே மண் திருட்டு: 3 லாரிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
ரெட்டியாா்சத்திரம் அருகே மாங்கரை குளத்தில் மண் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் மண் பதுக்கி வைத்திருப்பதாக ரெட்டியாா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, போலீஸாா் காமாட்சிபுரத்திலுள்ள தோட்டத்துக்குச் சென்றபோது, மண் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து அருண்குமாா், கோபால், கிருஷ்ணன், முத்துராம் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



